Video Gallery

News7 சானலில் ஓராசிரியர் பள்ளிகள் அமைப்பின் கெளரவச் செயலாளர் அவர்கள் நேர்காணல்

ஜுலை  21  2018 அன்று News7 சானல் “பேசும் தலைமை” நிகழ்ச்சிக்கு ஓராசிரியர் பள்ளிகள் அமைப்பின் கெளரவச் செயலாளரான திரு ஆர்.பி கிருஷ்ணமாச்சாரி அவர்களை அழைத்து சிறப்பித்தது.

இந்த நேர்காணலின் முதற் பகுதியில் 1980களில் நமது நாட்டிலே முன்னோடியாக உயிரி தொழில்நுட்ப (pioneer in bio technology) தொழிற்சாலையை துணிச்சலாக அமைத்து எதிர்கொண்ட அவரது அசாத்தியமான தொழில் வெற்றியைச் சுருக்கமாகக் கூறினார்.

அடுத்ததாக, இந்த நேர்காணலில் திரு.ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள், கிராமப் புற மாணவர்கள் தரமான கல்வி பெற அரும்பணி ஆற்றிவரும் “ஓராசிரியர் பள்ளிகளில்” தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செய்து வரும் சேவைப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். ஓராசிரியர் பள்ளிகள் 4 மாவட்டங்களில் உள்ள 650 தொலைதூரக் குக்கிராமங்களில் இயங்கும் விதம் குறித்தும், அந்த அமைப்பு கல்வி மட்டுமல்லாமல் கிராமப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்க்காகவும் செய்து வரும் சேவைப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

நேர்காணலின் முடிவில், “தன் வாழ்நாள் முழுவதும் இது போன்ற தர்ம காரியங்களுக்காகவே செலவிட திட்டமிட்டுள்ளதாக” அவர் கூறியது அனைவரின் நெஞ்சைத் தொட்டது.

தொழில்துறை மட்டும் அல்லாமல் சமூகப் பணி ஆற்றுவதிலும் பெரு வெற்றி பெற்று துடிப்புடன் தொடர்ந்து செயலாற்றி வரும் திரு.ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி அவர்களை அழைத்ததன் மூலம், News7 சானலின் “பேசும் தலைமை” நிகழ்ச்சியே பெருமை பெற்றது என்றே சொல்லலாம்.

SACRED SINGLE TEACHER SCHOOLS

Single Teacher Schools - Visit by Students & Lecturers of Meenakshi College for Women

Single Teacher Schools -- Thiruporur Thaluk, Kanchipuram District

Single Teacher Schools( Toilet Project) Swachh Bharat Abhiyan

Single Teacher Schools Swachh Bharat Abhiyan( Toilet/Bathroom Project)